Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

530 மருத்துவர், 1000 செவிலியர், 1,508 டெக்னிஷியன், 200 ஆம்புலன்ஸ் – மாஸ் காட்டும் EPS

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக முதல்வர் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார்.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்குக்கு முன்னதாகவே தமிழகஅரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது பள்ளி மாணவர்கள் தேர்ச்சி இன்றி தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் நடைமுறையையும் அமல்படுத்தியது. கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் தமிழக சுகாதாரத்துறை சிறப்பான பணியை மேற்கொண்டு வருகின்றது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கொரோனா குறித்த விஷயங்களை உடனுக்குடன் தெரியப்படுத்தி, மக்களை விழிப்புணர்வுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றார்.இந்நிலையில் தமிழக மருத்துவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேலும் பலப்படுத்துவதற்காக பல்வேறு  மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை தமிழக முதல்வர் பிறப்பித்துள்ளார். இது கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கையாகும்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சுகாதாரத்துறை செயலாளர் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

அதில் மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் என்று மூன்றே நாட்களில் புதிதாக 530 மருத்துவர்களையும் , 1000 செவிலியர்கள், 1,580 ஆய்வக டெக்கனிஷியன்களை நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதே போல 200 புதிய ஆம்புலன்ஸ் வாங்கி பயான்பட்டுக்கு கொண்டுவரவும் தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

Categories

Tech |