Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

530 மருத்துவர்கள்…. 1000 செவிலியர்கள்…. 200 ஆம்புலன்ஸ்…. முதல்வர் ஆணை ….!!

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுளார். கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் குணமடைந்து வீடு திரும்ப உள்ளார்.

இந்தநிலையில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் 4,000 கோடி ரூபாய் கேட்டு பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதில்  மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஆணை பிறப்பித்துள்ளார். மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் என்று மூன்றே நாட்களில் புதிதாக 530 மருத்துவர்களையும் , 1000 செவிலியர்களையும் நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதே போல 200 புதிய ஆம்புலன்ஸ் வாங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

Categories

Tech |