தமிழகத்தில் கொரோனா சூழலை கட்டுப்படுத்துவதற்காக 533.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்ற அறிவிப்பையும் நேற்று காலை வெளியிட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற சூழ்நிலையில் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.533.2 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. 15ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ. 1,441.6 கோடி, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ. 861.4 கோடி, பீகார் மாநிலத்திற்கு ரூ.741.8 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ. 652.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.