Categories
உலக செய்திகள்

535 கப்பல்களை தடுத்து வைத்திருந்த எவர்கிரீன்… மீண்டும் தொடங்கிய போக்குவரத்து…!!!

சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த பிரம்மாண்ட கப்பல் அகன்று சென்ற பிறகு வழக்கமான கப்பல் போக்குவரத்து தொடங்கியது.

உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக இருப்பது எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய். பல நாட்டு சரக்கு கப்பல்களும் இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் அந்த கால்வாயில் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் ஒன்றை சில தினங்களுக்கு முன்பு சிக்கிக் கொண்டது. அதனால் உலக பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.

அந்தக் கால்வாய் வழியாக உலக வர்த்தகத்தின் முக்கிய புள்ளி விவரங்கள் அனைத்தும் அடங்கியுள்ளன. அதனால் கடல் வழிப் பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 2,900கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட புழுதிப் புயலால் சிக்கி நின்ற சரக்கு கப்பலை மீட்க கப்பல் ஊழியர்கள் அனைவரும் திணறினர்.

இந்நிலையில் சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்கு கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை 20,000 பெட்டகங்கள் உடன் சூயஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல் ஒரு வாரம் முயற்சிக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது. சரக்கு கப்பல் தரை தட்டியது ஆசிய மற்றும் மேற்கிந்திய நாடுகள் இடையேயான வர்த்தக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கப்பல் அவர்கள் சென்ற பிறகு வழக்கமான கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இரு மார்க்கத்திலும் 113 கப்பல்கள் கடந்து சென்றன. மேலும் அங்கு நின்று கொண்டிருக்கும் 422 கப்பல்களும் மூன்று அல்லது நான்கு நாட்களில் சூயஸ் கால்வாயை கடந்து செல்லும் என ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |