Categories
மாநில செய்திகள்

537 லாட்ஜுகள், மேன்ஷன்களில்…. அதிரடியில் இறங்கிய சென்னை காவல்துறையினர்….!!!!

சென்னை பெரு நகரில் குற்றங்களை குறைக்க, தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய, பழைய குற்றவாளிகளை கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கு பல நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையிலுள்ள தங்கும் விடுதிகளான லாட்ஜ்,மேன்ஷன்களில் சோதனைகள் நடத்தவும் முக்கியமான இடங்களில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும் காவல் ஆணையர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டதன்படி காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்குழுவினர் சிறப்பு தணிக்கைகளானது மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னை பெருநகரிலுள்ள 537 லாட்ஜுகள், மேன்ஷன்கள் என தங்கும் விடுதிகளில் காவல்குழுவினர் சோதனைகள் மேற்கொண்டனர். இந்த சோதனையில் பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி இருக்கின்றனரா?, ஆயுதங்கள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா? என சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் (அல்லது) பொருட்கள் பற்றி தகவல் அறிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்கவேண்டாம் என்றும் லாட்ஜ் உரிமையாளர்கள், மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் (10.09.2022) இரவு சென்னையிலுள்ள முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில் தற்காலிக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, சிறப்பு வாகனத்தணிக்கைகள் மேற்கொண்டு 5,603 இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் மற்றும் அவற்றில் பயணித்த நபர்கள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மதுபோதை, விதிமீறல் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் ஓட்டியது பற்றி 89 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Face Recognition Software என்ற முக அடையாளத்தை கொண்டு குற்ற நபர்கள் அடையாளம் காணும் FRS கேமரா வாயிலாக 2,264 நபர்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு 20 பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை பெரு நகர காவல்துறையினரின் இச்சோதனைகளானது தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் குற்ற நபர்கள் (அல்லது) சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படியும் காவல் துறை ஆணையர் சங்கர்ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |