ஆப்ரிக்காவில் இறந்துபோன யானைகளின் உடல்களை தின்ற 537 அரிய வகை கழுகுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு ஆப்ரிக்காவின் போட்ஸ்வானா வன பகுதியில் வேட்டையாளர்களால் கொல்லப்பட்ட 3 யானைகளின் உடல்களை உண்ட 537 கழுகுகள் உயிரிந்துள்ளன. பொதுவாக வனப்பகுதியில் விலங்குகள் ஏதாவது இறந்து கிடந்தால் கழுகுகள் அவற்றை உண்பது வழக்கமான செயல். ஆனால் இங்கு உயிரிழந்த யானைகளை உண்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
கழுகுகள் மரணமடைந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, உயிரிழந்த 3 யானைகளின் உடல்களிலும் விஷம் ஏற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவற்றை உண்ட கழுகுகள் உயிரிழந்ததாகவும்தெரிவித்தார். பொதுவாக விலங்குகள் இறந்தாலோ, இறக்கும் தருவாயில் இருந்தாலோ அந்த இடத்திற்கு நேராக மேலே கழுகுகள் வட்டமடிக்கும். இதனை வைத்து எளிதாக வனத்துறையினர் அந்த இடத்திற்கு சென்று வேட்டைக்காரர்களை பலமுறை பிடித்துள்ளனர்.
எனவே கழுகுகளை அழித்து விட்டால் வனத்துறையினர் வேட்டை நடக்கும் இடங்களுக்கு வருவது கடினம் என்பதால் திட்டமிட்டு கழுகுகளை கொல்ல விஷம் வைத்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இயற்க்கை பாதுகாப்பில் சிவப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அழியும் நிலையில் இருக்கும் 468 வெண்முதுகுப் கொண்ட கழுகுகள் உட்பட பல அரிய வகை கழுகுகள் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.