இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 54 லட்சம் twitter பயனர்களின் தரவுகளை சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்துள்ளனர். பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு ஹேக்கர்களின் மன்றங்களில் பதிவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளிகளின் கையில் சிக்கியதாக செய்தி வெளியான சில நாட்களிலேயே ட்விட்டர் டேட்டா ஹேக் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெவ்வேறு வகையான பயன்பாட்டு வலைத்தளங்களை பயன்படுத்தி பயனர்களின் சுய விவரங்கள் திருடப்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது