ஆப்பிரிக்க நாடான மாலியின் கிழக்குப் பகுதியிலுள்ள இன்டெலிமனே (Indelimane) ராணுவ தளத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் உள்பட 54 பேர் பலியாகினர்.இத்தாக்குதலைத் தொடர்ந்து இன்டெலிமனே பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாகவும் மாலி நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் யயா சங்கரே (Yaya Sangare) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இத்தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனை ஐஎஸ் அமைப்புக்குச் சொந்தமான அமக் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.மாலி கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது. இதேபோல அக்டோபர் மாதம் நடைபெற்ற தாக்குதலில் 25 ராணுவத்தினர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.