சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 54 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் விற்பனை, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 44 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 6 பேரும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 59 புகையிலை பாக்கெட்டுகள், 365 மது பாட்டில்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.