சென்னையில் 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களில் 55 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த, தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியில் 20 லட்சம் பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருப்பதாகவும், அதில் ஒன்பது லட்சத்து 51 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாகவும் சென்னை மாநகராட்சி கூறி உள்ளது.
இன்னும் 55 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்ற தகவலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்களை நடத்த சென்னை மாநகராட்சி திட்டம் விடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.