பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்று நாட்டின் பல பகுதிகளிலும் பரவியதோடு, அவை 50 சதவீத பரவும் வேகமும் 55 சதவீதம் மரணத்தையும் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஜீவ வாயு விஞ்ஞானத்துறை பணிப்பாளர் மருத்துவ நிபுணர் சந்திம ஜீவந்தர கொரோனா தொற்று குறித்த பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் குருநாகல், கொழும்பு, பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரி மூலம் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்று இலங்கையில் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த வைரஸ் 50 வீதம் வேகமாக பரவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதை கருத்தில் கொண்டு சோதனை மேற்கொண்டதில் குருநாகல் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் 43 மாதிரிகளை சேகரித்து அதை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் பிரித்தானியாவில் உருமாறிய வைரஸ் இலங்கையில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மேலும் இந்த வைரஸ் 50 வீதம் வேகமாக அதிகரிக்கலாம், 55 சதவீதம் மரணங்களை ஏற்படுத்தலாம் என்றும் அறிய முடிகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றை கட்டுப்படுத்த அஸ்ட்ரா செனாகா தடுப்பூசி சிறந்த தீர்வாக இருக்கும் என்று கூறிய அவர் இலங்கை முழுவதும் வைரஸானது மிகவும் வேகமாக பரவியுள்ளது என்றும் கூறியுள்ளார்.