Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

55 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும்…. குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர்…. அதிரடியாக உத்தரவிட்ட உதவி ஆட்சியர்….!!!!

குற்ற செயல்களில் ஈடுபட்ட நபருக்கு  சிறை தண்டனை விதித்து உதவி ஆட்சியர்  அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரிச்சந்திரபுரம் பகுதிகள் சிலம்பரசன் என்பவர் ரசித்து வருகிறார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல் நிலையங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனை அறிந்த மன்னார்குடி உதவி ஆட்சியர் அவரை 1 வருடம் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது என்று எச்சரித்துள்ளார். இதன்படி நடப்பதாக உறுதி அளித்த சிலம்பரசன் 1  வருடம் முடிவதற்குள் கடந்த 8-ஆம்  தேதி வடபாதிமங்கலத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரை  அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இந்நிலையில் சிலம்பரசன் 1  வருடம் முடிவதற்குள் ஒழுங்கு நடவடிக்கையை கடைப்பிடிக்க தவறியதால் அவருக்கு மீதமுள்ள 55 நாட்கள் ஜாமீனில் வெளியே வர முடியாதவாறு திருச்சி மத்திய சிறையில் அடைக்க மன்னார்குடி உதவி ஆட்சியர் கீர்த்தனாமணி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் சிலம்பரசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |