Categories
தேசிய செய்திகள்

55 ரூபாய் முதலீடு செய்தால் போதும்…. மாதம் 3000 ரூபாய் பென்சன் கிடைக்குமாம்…. இதோ சூப்பர் திட்டம்….!!!!

கார்ப்பரேட் நிறுவனங்கள், நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பென்சன் போன்ற திட்டங்களுக்கு EPFO உள்ளிட்ட அமைப்புகள் இருக்கிறது. ஆனால் கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் போன்றவர்களுக்கும் பென்சன் சேவைகள் கிடைப்பதற்கு சூப்பர் திட்டம் இருக்கிறது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்காகவே பிரதமர் ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Man Dhan Yojana) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் அமைப்புசாரா தொழிலாளர்களும் பென்சன் ஆகிய பணி ஓய்வுக் கால பலன்களை பெறலாம்.

இத்திட்டத்தில் மாதம் 55 ரூபாய் முதலீடு செய்து வந்தால் போதும். வருடத்துக்கு 36000 ரூபாய், அதாவது மாதம் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும். இந்தியாவில் தோராயமாக 42 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா திட்ட பயனாளி உயிரிழந்துவிட்டாலும் அவரது கணவன்/மனைவிக்கு பென்சன் கிடைக்கும். இந்த திட்டத்தில் 18 -40 வயது வரையிலானவர்கள் முதலீடு செய்யலாம். அதன்பின் 60 வயதை தொட்டபின் பென்சன் கிடைக்கும். இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் அருகிலுள்ள பொது சேவை மையத்தை அணுகி கணக்கை தொடங்கலாம்.

Categories

Tech |