Categories
அரசியல்

55 ரூபாய் முதலீடு….. மாதம் 3000 ரூபாய் பென்சன்…. மத்திய அரசின் அட்டகாசமான திட்டம்…. ட்ரை பண்ணுங்க….!!!

பிரதமரின் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு  மாதம் 3,000 ரூபாய் பென்சன் கிடைக்கும். மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இணையும் விவசாயிக்கு இரண்டு ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் இருக்க வேண்டும். இரண்டு ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் பலன்களைப் பெற முடியாது.

18 வயதாக இருக்கும்போதே இத்திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் பங்களிப்பு வழங்க வேண்டும். 30 வயதில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 பங்களிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு முதலீடு செய்யும் போது ஓய்வுக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் பென்சன் வாங்க முடியும். இத்திட்டத்தில் இணையும் விவசாயிக்கு 60 வயது ஆகும்போது அவரது வங்கிக் கணக்கில் குறைந்தது ரூ.3,000 வந்து சேரும். இத்திட்டத்துக்கான வயது வரம்பு 18 முதல் 40 ஆகும்.

இதில் இணையும் விவசாயி தனது 60 வயது வரையில் மாதத்துக்கு ரூ.55 முதல் ரூ.200 பிரீமியம் செலுத்த வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தில் இணையும் வயதைப் பொறுத்து பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இத்திட்டத்தில் இணைவதற்கு maandhan.in என்ற முகவரியில் சென்று இணையலாம்.  இத்திட்டத்தில் இணைவதற்கு ஆதார் , வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றை வைத்து இணையலாம்.  இந்த ஆவணங்களை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள பொதுச் சேவை மையத்துக்குச் சென்று இணையலாம். இதற்கு சிறு தொகை கட்டணமாக வசூலிக்கப்படும்.

Categories

Tech |