விசைப்படகு கடலில் மூழ்கிய விபத்தில் 20 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இணையம்புத்தன்துறை கிராமத்தில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான அனிட் மரியா என்ற விசைப்படகில் சார்லஸ் உள்பட 20 பேர் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூடேஷ்வரம் துறைமுக பகுதியில் இருந்து சுமார் 30 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது படகின் அடிப்புறத்தில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்துள்ளது. இதனையடுத்து சுமார் 55 லட்ச ரூபாய் மதிப்புள்ள படகு முழுவதுமாக கடலுக்குள் மூழ்கிவிட்டது. இதில் 20 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.