Categories
மாநில செய்திகள்

55 வயது மேலுள்ளோருக்கு 100 நாள் வேலை: பாலகிருஷ்ணன்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் 100 நாள் வேலை திட்டத்தில் 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை தரக்கூடாது என்ற தடை உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வருடத்திற்கு 100 நாட்கள் மட்டும் வழங்கப்படும் வேலையை 200 நாட்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |