தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 55 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசாமிபுரத்தில் ஒரு ஏக்கரில் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு பாலாஜி ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த கால்நடைகளை ராமர் என்பவர் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் ராமரும், பாலாஜியும் ஆடு மாடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.
இதனையடுத்து மறுநாள் காலையில் ராமர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த 55 ஆடுகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராமர் பாலாஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாலாஜி திருச்செந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருச்செந்தூர் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.