தனியார் துறை கீழ் செயல்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் 554 கிலோ மீட்டர் துரைத்தை வெறும் 6.15 மணி நேரத்தில் கடக்கின்றது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் ரெயில்வேதுறையில் தனியார் மையத்தை புகுத்தும் வகையில் கடந்த மத்திய பட்ஜெட்டில் இந்திய ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது.இதன் ஒருபகுதியாக இந்த சேவையை நாட்டில் முதல்முறையாக உத்திர பிரதேச மாநிலத்தில் அக்டோபர் மாதம் 4_ஆம் தேதி இந்த சேவையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்க இருக்கிறார்.தனியார் சார்பில் இயக்கும் ‘தேஜாஸ் எக்ஸ்பிரஸ்’என்று பெயர் வைக்கப்பட்ட இந்த ரயில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் இருந்து டெல்லி செல்ல இருக்கின்றது.
லக்னோ முதல் டெல்லிக்கு பயண தூரமான 554 கி.மீ_யை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் வெறும் 6.15 மணி நிமிடங்களில் இந்த தூரத்தை கடக்கும் என்று சொல்லப்படுகின்றது. இதனால் டெல்லியில் இருந்து காலை 6.10க்கு புறப்பட்டும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மதியம் 12.25 மணிக்கு டெல்லிக்கு செல்லும். பின்னர் டெல்லியில் இருந்து மாலை 4.30 மணிக்கு லக்னோவுக்கு புறப்பட்டும் இந்த இரயில் இரவு 10. 45 மணிக்கு லக்னோ வந்தடையும். இது கான்பூர் சென்ட்ரல், காசியாபாத் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.