உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இதயத் துடிப்பால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஸ்டான் லாக்கின் என்ற வாலிபர் 555 நாட்கள் தன்னுடைய இதயமே இல்லாமல் வாழ்ந்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அதாவது ஸ்டான் லாக்கின் (25) என்பவருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மாற்று இதயம் பொருத்தப்பட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் வாலிபருக்கு மாற்று இதயம் கிடைக்காததால் சிலிக்கானால் செய்யப்பட்ட செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.
அந்த செயற்கை இதயம் உடம்புக்குள் பொருத்தப்பட்டு இருந்தாலும் அதனுடைய செயல்பாடுகள் அனைத்தும் ஒரு பையில் தான் இருக்கும். அதன் எடை சுமார் 6 கிலோ இருக்கும். அந்தப் பையை தன்னுடைய தோளில் சுமந்து கொண்டே வாலிபர் 555 நாட்கள் வாழ்ந்துள்ளார். அதன்பிறகு வாலிபருக்கு மாற்று இதயம் கிடைத்ததால் மீண்டும் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மாற்று இதயம் பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வாலிபர் முழுமையாக குணமடைந்து நலமுடன் இருக்கிறார்.