Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 5,560 பேர் பலி…. உலகை மரண வேட்டை ஆடும் கொரோனா …!!

உலகளவில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 5560 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.

கொரோனா உயிரிழப்பு 9-ஆக அதிகரிப்பு ...

தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உலகளவில் மக்கள் அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றார்கள். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,092,986 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 58,727 பேர் உயிரிழந்துள்ளனர். 228,038 பேர் குணமடைந்த நிலையில் 806,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 39,402 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Coronavirus affects 918 people in India; First death toll in ...

உலக நாடுகளை கொடூரமாக பாதித்துள்ள கொரோனா மக்களில் உயிரை கொத்துக்கொத்தாக பறித்துச் செல்கின்றது. உலகளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,560 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 58,727 ஆக அதிகரித்தது. நேற்று மட்டும் அதிகபட்சமாக  பிரான்ஸில் 1,120 பேரும், அமெரிக்காவில் 934 பேரும், ஸ்பெயினில் 850 பேரும், இத்தாலியில் 766 பேரும், பிரிட்டனில் 684 பேரும், ஜெர்மனியில் 168 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |