பள்ளியில் அமைத்திருந்த தேர்வு மையத்தில் 560 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் பெல் டி.ஏ.வி பள்ளியில் நீட் தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 360 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 23 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில் 337 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வை எழுதியள்ளனர். அதன்பின் ஒரு அறைக்கு 12 பேர் என 30 அறைகளில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் மாவட்ட மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் வாசுகி தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மேல்விஷாரம் குளோபல் பொறியியல் கல்லூரியில் 240 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். ஆனால் 17 பேர் தேர்வு எழுத வராத நிலையில் 233 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். இதனை தொடர்ந்து 2 மையங்களிலும் மொத்தமாக 560 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதாக ஒருங்கிணைப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.