மலேசியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 9 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் நேற்று ஒரே நாளில் 5,624 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 9 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 10,041 பேர் வீடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று ஒரே நாளில் 73,767 தவணை தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 84.8% மக்கள், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். 81.2% மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 49% மக்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி அளிக்கப்பட்டிருக்கிறது.