சமூகவலைத்தளத்தில் ரசிகர் கேட்ட கேள்விக்கு ராஷ்மிகா பதிலளித்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ”கீதாகோவிந்தம்” என்னும் தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானார். தற்போது, ஹிந்தியில் ‘மிஷன் மஞ்சு’ மற்றும் ‘குட்பை’ என்னும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமூகவலைதளத்தில் ராஷ்மிகா மந்தனா ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருவார். அந்த வகையில், ரசிகர் ஒருவர் ‘நீங்கள் ஏன் கன்னட படத்தில் நடிப்பதில்லை’ என கேட்டார். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, தெலுங்கிலிருந்து பாலிவுட்டிற்கு நடிக்க சென்றதால் நேரம் சரியாக இருக்கிறது எனவும், மேலும், தமிழிலும் சில படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறினார். நான் எல்லா தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் நடிக்க வேண்டுமென்றால் வருடத்திற்கு 565 நாட்கள் தேவைப்படும் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.