கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்களில் கோவிட் கட்டுப்பாடு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்களில் இதுவரை சேகரிக்கப்பட்ட 5,666 மாதிரிகளில், 53 சர்வதேச பயணிகளுக்கு கோவிட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது என்ன வகை கொரோனா என்ற விபரங்கள் வெளியாகவில்லை.