Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

57 பந்து…. 11 பவுண்டரி….. 74* ரன் …. மாஸ் காட்டிய ஆட்டநாயகன் சேவாக் …..!!

சாலை பாதுகாப்பு கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் சேவாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் டி20 தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியும் , லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சந்தர்பால் 61 ரன் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஜாகிர் , படேல் , ஓஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய லெஜெண்ட் அணி 10 பந்துகள் மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவாக் 57 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்திய லெஜெண்ட் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டு கொடுத்த வீரேந்திர சேவாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Categories

Tech |