இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 3ஆவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட் மற்றும் தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் மோதின. முதலில் பேட் செய்த ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து. அதிகபட்சமாக தில்ஷான் , கபுகேதரா தலா 23 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் ஜாகீர் , பதான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் ஆடிய இந்திய லெஜெண்ட் அணியின் முன்னணி வீரர்கள் சொதப்ப ஆல் ரவுண்டர் இர்பான் பதான் அதிரடியை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் இந்திய அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இர்பான் பதான் 31 பந்துகளில் 6 பவுண்டரி , 3 சிக்ஸர் என 51 ரன் எடுத்து அசத்தினார். பந்து வீச்சில் 4 ஓவரை போட்ட அவர் 31 ரன் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவரின் அதிரடி ஆட்டத்தால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.