தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே 74பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர். இதில் மேலும் 50பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று தமிழக சுதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதில் தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 45 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்று தெரிவித்தார். ஏற்கனவே 74 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ததால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே இன்று காலை 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்களும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.