தேனியில் 57 வயதான மூதாட்டியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஓடைத்தெருவில் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தி. 57 வயதான மூதாட்டி சாந்தி அருகேயுள்ள உழவர் சந்தையில் சிறு, சிறு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.நேற்று இரவு மூதாட்டி வேலை செய்து கொண்டு இருக்கும் போது அங்கே வந்த ஒரு கும்பல் மூதாட்டியை கொடூரமாக பலாத்தகாரம் செய்துள்ளனர். இதில் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
பின்னர் காலை மூதாட்டியின் சடலத்தை பார்த்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மூதாட்டியை பலாத்காரம் செய்த போது அந்த கும்பல் சத்தம் கொடுக்க கூடாது என்று வாயை கயிற்றால் கட்டியும், சுவரொட்டிகள் ஒட்ட பயன்படுத்தும் பசையை முகத்தில் பூசியும் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகின்றது.