கனடாவில் ஒரு பெண் மாயமானது தொடர்பில் காவல்துறையினர் தகவல் வெளியிட்டிருக்கிறார்கள்.
கனடாவின் ரொறொன்ரோ மாகாண காவல்துறையினர் அந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். மரியா சர்வரி என்ற 57 வயது பெண் கடந்த புதன்கிழமை அன்று இரவு 8 மணியளவில், Jarvis St + Queen St E என்ற பகுதியில் இறுதியாக தென்பட்டிருக்கிறார்.
அதன் பின்பு அவர் மாயமானார். அவர் மாயமான அன்று, சிவப்பு நிற உடை அணிந்திருந்ததாக கூறப்பட்டிருக்கிறது. தற்போது காவல்துறையினர் அவர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறு கூறியிருக்கிறார்கள்.