சென்னை புளியந்தோப்பு பெரம்பலூரில் உள்ள கே.எம். கார்டன் தெருவில் அருள்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். அவரது மகன் பீட்டர் ஜான்(27) இவர் டெக்ரேசன் வேலை செய்து வருகிறார். இவர் புளியதோப்பு டோபிகண்ணா பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அவரது வீட்டில் பாத்ரூம் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அதன்பிறகு அவரது தம்பி கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பீட்டர் ஜான் இரும்பு பைப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து தம்பி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் பீட்டர் ஜான் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை செய்தபோது, அவர் காதலித்து வந்த பெண்ணுக்கும் இவருக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை அந்த பெண்ணுக்கு பீட்டர் ஜான் பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் அந்த பெண் போனை எடுக்காத காரணத்தினால் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.