நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு பலரும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் பல குழந்தைகளும் தங்களுடைய பெற்றோரை இழந்து அனாதையாக உள்ளனர். அவ்வாறு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல அரசுகளும் சலுகைகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 26ம் தேதி வரை அனைத்து மாநிலங்களிலும் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 577 குழந்தைகள் கொரோனா தொற்றிற்கு பெற்றோரை இழந்து அனாதையாக உள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த குழந்தைகளின் நலனுக்காக மாவட்டந்தோறும் ரூபாய் 10 லட்சம் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.