கேரளா மாநிலம் தலாயி பகுதியில் சலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி ருபீனா. இவர்களுக்கு ரமீசா என்ற மகள் உள்ளனர். இந்த தம்பதியினர் தங்களது மகள் ரமீசாவின் திருமணத்தோடு சேர்த்து மேலும் 5 பெண்களின் திருமண செலவை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில் இரண்டு திருமணங்கள் இந்து முறைப்படி மற்றும் மூன்று திருமணங்கள் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. இதற்கு முன்னதாகவே சலீம் வரதட்சணை வாங்காத ஒருவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
மேலும் தங்களின் மகன் திருமணத்தை எளிய முறையில் நடத்த வேண்டும் என்றும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த 5 பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் முடிவு செய்திருந்தார். அதன்படி கேரள மாநிலம் வயநாடு, எடச்சேரி, கூடலூர், மலப்புரம் மற்றும் மேப்பயூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 குடும்பங்களை அவரே தேர்ந்தெடுத்து குடும்பங்களில் உள்ள 5 பெண்களின் திருமண செலவுகளை அவரை ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் தங்களது மகள் ரமீசாவின் திருமணம் நடைபெற்ற அதே நாளில் அந்த ஐந்து பெண்களில் திருமணத்தையும் அவர் நடத்தி வைத்துள்ளார். இந்த திருமணம் முனைவர் அலி ஷிஹாப் தலைமையில் எளிமையான முறையில் நடைபெற்றது.