தமிழகத்தை சேர்ந்த லட்சுமி சாய் ஸ்ரீ என்ற சிறுமி 58 நிமிடங்கள் 46 வகையான உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் 58 நிமிடங்களில் 46 வகை உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். இது உலக சாதனை யுனிகோ தலைமை நீதிபதி சிவராமன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஒரு மணி நேரத்தில் 30 வகை உணவுகளை தயாரித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கேரளாவின் 10 வயது சிறுமியின் சாதனையை சென்னையை சேர்ந்த சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ முறியடித்துள்ளார்.
இதையடுத்து கொரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து அந்த சிறுமியின் தாயார் கலைமகள், உணவு தயாரிக்கும் போது அதனை அருகில் இருந்து பார்த்து தாமும் சமையல் செய்ய ஆர்வம் காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் தனது சாதனைக்கு என் அம்மாதான் பயிற்சி வழங்கி வழி காட்டியதாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.