Categories
தேசிய செய்திகள்

58 வருடங்களாக நிகழாத… வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு…பாதுகாப்பு ஆய்வாளர் ட்விட்டர் பதிவு…!!

நாகலாந்தில் 58 வருடங்கள் கழித்து முதன் முதலாக தேசிய கீதம் இயற்றப்பட்டது அரசியல் வரலாற்றில் அரிதாக கருதப்படுகிறது. 

வடகிழக்கு இந்திய மாநிலம் நாகலாந்தில் 13வது சட்ட மன்ற கூட்டத்தில் 7 ஆவது அமர்வு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் நாகலாந்தின் ஆளுநராக ஆர்.என் ரவி உரையாடுவதற்கு முன் மற்றும் உரையாடிய பின்பும் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருக்கிறது. அதாவது 1963 ஆம் வருடம் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து நாகாலாந்து 16ஆவது தனி மாநில அந்தஸ்தை பெற்றது.

அன்றிலிருந்து இசைக்கப்படாத தேசிய கீதம் தற்போது தான் முதன்முதலில் இசைக்கப்பட்டது. இதனால் இந்த நிகழ்வு இந்திய அரசியல் வரலாற்றிலேயே அரிதானதாக  கூறப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பாதுகாப்பு ஆய்வாளரான நிதின் ஏ கோகலே பதிவிட்டுள்ளார். இதே போன்று கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திரிபுரா மாநிலத்தில் இருக்கும் சட்டப்பேரவையிலும் முதல் முதலாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |