சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது..
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அதேசமயம் கடந்த சில நாட்களாக பிற மாவட்டங்களிலும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது..
பண்ணவாடி கிராமத்தில் உடல்நலக்குறைவால் செல்வம் என்ற இளைஞர் கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்தார்.. இந்த இளைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்றதால் 2 மருத்துவர்கள் உட்பட 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.. துக்க நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது என அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.