Categories
அரசியல்

“எங்க ஆட்சியில் கொண்டு வந்ததால மூடுவிழாவா”….? பழி வாங்குறதுக்கு இப்படி பண்றாங்க…. இபிஎஸ் பகீர்….!!!!

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா கிளினிக்குகளை மூடும் தமிழக அரசின் முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அம்மா கிளினிக் தொடங்கப்பட்டது. அப்போது நாடு முழுவதும் இரண்டாயிரம் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்க படுவதாகவும் இதனால் அம்மா கிளினிக்குகள் அவசியமற்றது எனவும் கூறி அம்மா கிளினிக்குகளை மூட போவதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து அம்மா கிளினிக் கைகளை மூடவே இவ்வாறான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் விமர்சித்தனர்.

மேலும் அம்மா கிளினிக்குகளை மூடும் இந்த செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மருத்துவ வசதி இல்லாத கிராமப்புறங்களிலும் அம்மா கிளினிக்குகள் மூலம் பல மக்கள் பயன் பெற்று வந்ததாகவும் இதனை மூடுவதால் ஏழை எளிய மக்கள் பலர் பாதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இந்த திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா பெயரை சூட்டியது தான் இந்த விடியா அரசின் பிரச்சனை எனவும், தற்போது செயல்பட்டு வரும் அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதாகவும் சாடியுள்ளார்.

Categories

Tech |