Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 5,87 பேர் மரணம்…. ஸ்பெயினில் கொத்துக்கொத்தாக மரணம் ..!!

கொரோனாவால் தொடர் உயிரிழப்புகளை சந்தித்து வரும் ஸ்பெயினில் நேற்று மட்டும் 587 பேர் உயிரிழந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.

How many people have died from coronavirus: Fatality rate has ...

தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உலகளவில் மக்கள் அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றார்கள். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,087,374 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 58,392 பேர் உயிரிழந்துள்ளனர். 227,989 பேர் குணமடைந்த நிலையில் 800,993 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 39,402 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Health Ministry confirms a thousand infected in Spain, and 28 dead ...

கொரோனவால் தொடர்ந்து உயிரிழப்புகளை சந்தித்து வரும் ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 587 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 10,935ஆக அதிகரித்தது. ஸ்பெயினில் 1,17,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 30,513 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 76,262 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 6,6416 பேர் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.

Categories

Tech |