Categories
சென்னை மாவட்ட செய்திகள்

59.23 லட்சம் மதிப்புள்ள 1.3 கிலோ தங்கம் பறிமுதல்…. 3 பேர் கைது…. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு….!!!

விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாக அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு ஒரு விமானம் வந்தது.

அதில் சென்னையைச் சேர்ந்த சுல்தான், கலந்தர் ஷாஜகான், மஸ்தான் கனி ஆகிய 3 பேரும் வந்தனர். இவர்கள் 3 பேரையும் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதில் 59 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 300 கிராம் தங்கம் இருந்தது. இந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |