Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரே நாளில் 597 பேர் பாதிப்பு… தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த வழிமுறை… சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலைக்கு புதிதாக 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 597 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,004 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து 8,235 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகள் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இதுவரை 28,374 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பலனின்றி 7 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 396 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழிமுறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |