பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் ( வயது 54 ) தி இன்ஸ்டியூட், தி பீப்பிள் கார்டன், எஸ்பிஎஃப் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். அதேபோல் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2010-ஆம் ஆண்டு கலந்து கொண்டார். இவர் இசைக் கலைஞர் டோமி என்பவரை கடந்த 1995-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அந்த திருமணம் மூன்று ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. அதன் பிறகு இந்த நடிகை கிட் ராக் என்ற பாடகரை கடந்த 2006-ஆம் ஆண்டு காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரையும் அதே ஆண்டில் விவாகரத்து செய்தார்.
பின்னர் ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை 2007-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அடுத்த ஆண்டே அந்த திருமணமும் முடிந்தது. பின்னர் நான்காவதாக ஹேர் ஸ்டைலிஸ்ட்டும், ஹாலிவுட் தயாரிப்பாளருமான ஜான் பீட்டர் என்பவரை கடந்த 2020-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் 12 நாட்களிலேயே அவரையும் விவாகரத்து செய்தார். இதனால் மொத்த ஹாலிவுட்டும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. இந்த நிலையில் தனது பாதுகாவலர் ஹேய்ஹர்ஸ்ட்டை கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி ஐந்தாவது திருமணம் செய்தார். ஆனால் பமீலா ஆண்டர்சன் தனது ஐந்தாவது கணவரையும் விவாகரத்து செய்ய போவதாக தற்போது அறிவித்துள்ளார்.