பாகிஸ்தானில் 5 டேட்டிங் செயலிகளுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பாக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்திய மக்களின் தரவுகளின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் அதனை மத்திய அரசு தடை செய்தது. இதனை தொடர்ந்து மாணவர்களின் மன அழுத்தத்தையும், அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற pubg உள்ளிட்ட 118 சீன செயலிகளை மீண்டும் இன்று மத்திய அரசு தடை செய்துள்ளது.
இதற்கு இந்திய மக்கள் பலரிடையே பெரும்பான்மையான வரவேற்பு கிடைத்துள்ளது. இதேபோல, இன்று பாகிஸ்தானில் ஆபாசமான தகவல் பரிமாற்றம் நடைபெறுவதாக ஐந்து டேட்டிங் செயலிகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. அதன்படி, பிரபல டேட்டிங் செயலிகளான tinder, tagged, skout, grinder, மற்றும் sayhi ஆகிய செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ஒழுக்கக்கேடான அம்சங்களை கொண்டிருப்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.