Categories
மாநில செய்திகள்

5g ஏலத்தில் ஊழலா….? திமுக எம்பி ராஜா குற்றச்சாட்டு…. அண்ணாமலை புது விளக்கம்…..!!!!!!!!!

சமீபத்தில் நடைபெற்ற 5g அலைக்கற்றை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என மத்திய அரசு மதிப்பீட்டு இருந்த சூழலில் வெறும் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு தான் இதுவரை ஏலம் போயிருப்பதாகவும் இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் திமுக எம்பி ஆர் ராஜா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார். அவரது குற்றச்சாட்டு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அதில் உரிமம் உள்ள நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம் அல்லது உரிமம்  இல்லாமல் குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டும் தொலைதொடர்பு சேவை கொடுக்க விரும்பும் நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.

எனும் அடிப்படையில் வித்தியாசமான முறையில் 5ஜி ஏலம்  நடைபெற்றுள்ளது. இதன் மூலமாக மத்திய அரசுக்கு 1.5 கோடி வருமானம் கிடைத்திருக்கின்றது. இதுதான் அலைக்கற்றை ஏல   வரலாற்றில் அதிகபட்ச வருமானமாகும். இதற்கு முன் மூன்று முறை விற்கப்பட்டதாக 700 மெகா ஹெர்ஸ் அலைக்கற்றை தற்போது முதல் முறையாக விற்கப்பட்டிருக்கிறது. மூன்று முறை விற்கப்படாத 700 மெகாஹெர்ஸ் இந்த முறை விற்கப்பட்டிருக்கிறது. மேலும் தற்போது ராஜா சொல்லும் குற்றச்சாட்டின் மூலம் 2ஜி ஊழலை அவர் மறைக்கப் பார்க்கின்றார். எம்பி ஆனவர் இந்த கேள்வியை நாடாளுமன்றத்திற்குள் கேட்டிருக்கலாமே அதுமட்டுமல்லாமல் திமுக யாராவது நாடாளுமன்றத்தில் இதைப் பற்றி பேசியிருக்கிறார்களா 4.30 கோடி வருவாய் வரும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆனால் அலைக்கற்றை முழுமையாக விற்கப்படவில்லை கொஞ்சம் தான் ஏலமிடப்பட்டிருக்கிறது. அடுத்த ஏலத்தில் மீதமுள்ள அலைக்கற்றை  விற்கப்படும் போது மத்திய அரசு மதிப்புள்ள தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் 2012ல் காங்கிரஸ் ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்ற இடத்தில் 28000 கோடிக்கு வெறும் 9400 கோடி தான் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் 5g என்பது வளர்ச்சி அடைய தொழில்நுட்பம் நாட்டின் பயன்பாட்டில் உள்ள செல்போன்களில் வெறும் ஏழு சதவீத செல்போன்கள் மட்டுமே 5 ஜி வசதி இருக்கிறது. 93% செல்போன்களில் அந்த வசதி இல்லை. தற்போது நடைபெற்றுள்ள ஏலம் 5ஜி அலைக்கற்றைக்கு மட்டுமல்ல 2ஜி, 3ஜி, 4ஜி அலை கட்சிக்கும் சேர்த்து தான் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Categories

Tech |