இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 1-ம் தேதி தொடங்கி வைத்தார். அதன் பிறகு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் தொடங்கியுள்ளது. இந்த 5ஜி சேவையானது 8 நகரங்களில் தொடங்கப்பட்ட நிலையில், 2023-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 5ஜி போன்களும் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது. இந்த 5ஜி போன்களை எப்படி தேர்வு செய்து வாங்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது 5ஜி போன்களில் mm wave, sub 6Ghz support உள்ள போனாக வாங்க வேண்டும். பல நிறுவனங்கள் 1 5ஜி பேண்ட் ஃபோன்களை மட்டுமே வழங்குகிறது.
ஆனால் 11 5ஜி பேண்ட் ஃபோன்களை மட்டும் தான் நாம் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். அதோடு தற்போதைக்கு புதிதாக எந்த போன் அறிமுகம் ஆகிறதோ அதைத்தான் நாம் வாங்க வேண்டும். அப்போதுதான் குவாலிட்டியாக இருக்கும். இதனையடுத்து நாம் வாங்கும் ஸ்மார்ட் ஃபோன்களில் குறைந்தது 4000mAh பேட்டரி இருக்க வேண்டும். இதில் அதிகபட்சமாக 5000mAh பேட்டரி இருந்தால் மிகவும் சிறந்தது. இதைத்தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களில் அதிக வசதிகள் மற்றும் அப்டேட்டுகள் இருக்கும் போனை பார்த்து வாங்க வேண்டும். மேலும் மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி நீங்கள் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் எவ்வித சிக்கலும் இல்லாமல் போனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.