Categories
டெக்னாலஜி பல்சுவை

அடேங்கப்பா இவ்ளோ கம்மி விலையில் 5g ஸ்மார்ட்போனா ?

நோக்கியா நிறுவனம் தனது  5ஜி ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளது .

நோக்கியா நிறுவனத்தின்  5ஜி ஸ்மார்ட்போனை ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனமானது உருவாக்கி வருகிறது. இந்த  5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படலாம்  என நோக்கியா அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்துள்ளார். தற்போது ,பல்வேறு  ஸ்மார்டபோன் நிறுவனங்கள்  புதியதாக 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி வரும் நிலையில்,

Image result for nokia 5g smartphone

ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை குறைவாக நிர்ணயிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில் ,  அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5ஜி தொழில்நுட்பமானது  பயன்படுத்தப்பட்டு வருகிறது . குறிப்பாக தற்போது விற்பனையாகும் 5ஜி ஸ்மார்ட்போன்களை விட நோக்கியா 5ஜி மொபைலின்  விலையானது பாதியாக விற்பனை செய்யப்படும்  என ஜூஹோ சர்விகாஸ் கூறியுள்ளார் .

 

 

 

மேலும், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலையானது  ரூ. 35,600 முதல் ரூ. 42,700 என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது . இந்நிலையில் , நோக்கியா தவிர ஹூவாய் மற்றும் மீடியாடெக் நிறுவனங்களும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது . மேலும் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போனிற்கான ,

 

ஹெச்.எம்.டி. குளோபல் சிப்செட் உருவாக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சர்விகாஸ் தெரிவித்துள்ளார் . இந்நிலையில் , இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவலையும் வெளிவரவில்லை . குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டிற்கு முன்பு  இதுகுறித்த  விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |