Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

“5, 8ஆம் வகுப்பு தேர்வு மையம்” புதிய அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதில் இருந்து வந்த குழப்பம் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கையால் நீக்கியுள்ளது.

முதல் முறையாக 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் இந்த மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் அமைக்கும் விவகாரத்தில் ஒரு முரண்பட்ட தகவல்கள்,  குழப்பங்கள் நிலவி வந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அப்போதிருந்த தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் , ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிலும் , எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவிலும் தேர்வு மையங்களை அமைக்கலாம் என்றும், தேவைப்பட்டால் வேறு மையங்களில் தேர்வு மையங்களை அமைக்கலாம் என்று அறிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி ஒன்றில் , மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் , அவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

கல்விதுறையின் சார்பில் ஏற்கனவே வெளியான அறிக்கையும் , அமைச்சரின் கருதும் முரண்பாடாக இருந்ததால் ஆசிரியர்களும் , பெற்றோர்களும்  மிகப்பெரிய குழப்பத்தில் இருந்து வந்தனர். மிகச் சிறிய மாணவர்களுக்கு தேர்வு மையங்களை வேறு பள்ளிகளில் அமைக்கக் கூடாது என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் பள்ளிக்கல்வித்துறையிடம் வலியுறுத்தி வந்தனர் .

இந்த சூழ்நிலையில்தான் தற்போதைய தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் திரு பழனிச்சாமி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த காரணம் கொண்டும் வேறு பள்ளிகளுக்கு தேர்வு மையங்களாக மாற்றப்பட மாட்டாது என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார். மாணவர்கள் படிக்க கூடிய பள்ளியிலேயே தேர்வு மையங்களாக செயல்படும் என்றும் , மாணவர்கள் அவரவர் படிக்கக்கூடிய பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் என்றும் அவர் அறிவித்திருக்கிறார் இதன் மூலம் கடந்த சில நாட்களாக நிலவிவந்த ஒரு குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது.

Categories

Tech |