திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் என்னிடத்திலே சொல்லி இருக்கிறார், நான் கூட அவரை என்னவென்று நினைத்தேன். ஆனால் அவர் அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான். எனக்கு என்ன குறை, வயசாகி விட்டது. நாளைக்கு போலாம்.. அதற்கு மறுநாள் போகலாம்… ஆனால் இந்த இயக்கம் போய் விடக்கூடாது.
இன்னொரு இயக்கத்தை உருவாக்குவதற்கு நம்மிடம் ஆள் இல்லை, இந்த ஆட்சி போகிறது, வருகிறது. நாளைக்கு போகும், நாளை மறுநாள் வரும். ஆனால் இயக்கம் போய்விட்டால் நம் இனமே போய்விடும். இதற்கு முன்னால் நாம் இப்படி வருவோம் என்று தெரியாமல், நம்மளை விட்டு விட்டார்கள் எதிரிகள்… இந்த இயக்கம் வளர்ந்தாலும் ஒரு ஆபத்து இல்லை என்று…
ஆனால் வளர்ந்தால் நாம் எப்படி இருப்போம் என்று அவர்களுக்கு தெரிந்து போய் விட்டது. இன்னொரு முறை நாம் கீழே விழுந்துவீட்டோம், நம்மளை தூக்குவதற்கு ஆள் இல்லை, அதோடு மரணத்தில் கொண்டு போய் சேர்த்து தள்ளி விடுவார்கள். எந்த தலைவர் தியாகம் செய்த தொண்டனை திரும்பிப் பார்க்கிறானோ, அவன் பின்னால் அந்த கட்சி நிற்கும்.
பேராசிரியர் அவர்கள் படிக்கிற 14 வயதிலேயே சுயமரியாதை உணர்வை பெற்றவர். ராமையா என்ற பெயரோடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நுழைந்தவர், அண்ணாவை கண்ட பிறகு அன்பழனாக மாறியவர், பிறகு பெரியார் இடத்தில் மாணவராக இருந்தவர், அதற்கு பிறகு இரண்டாம் இடத்திலே அணுகும் தொண்டராக இருந்தவர். இரண்டு தலைமுறைகளை பார்த்தவர், மூன்றாவதாக தலைவர் கலைஞரை தலைமை ஏற்று மூன்றாவது தலைமுறையை பார்த்தவர்,
அதற்குப் பிறகு அவர் மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையை பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி ஐந்தாவது தலைமுறையையும் பார்த்தவர். உதயநிதி ஸ்டாலின் அடுத்து திமுக தலைவராக வருவார் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டு சொல்லி வந்தாலும் அதற்க்கு வலு சேர்க்கும் வகையில் அமைச்சர் துரைமுருகன் பிள்ளையார் சுழி போட்டு, அதற்கான பேச்சை இப்போதே தொடங்கி விட்டார்.