Categories
அரசியல்

ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்புகள்?

கொரோனா ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவற்றை திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வரும் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், இசை, நடன அரங்குகள் போன்றவை திறக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வர உள்ளதால் கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Categories

Tech |