Categories
கிரிக்கெட் விளையாட்டு

5வது டி 20போட்டியில்…இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா …இலங்கை கிரிக்கெட் வீரர் பாராட்டு …!!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த டி 20 ஓவர்  போட்டியில் ,இந்திய அணி வெற்றி பெற்றதற்கு , இலங்கை  கிரிக்கெட் வீரர் அர்னால்டு பாராட்டியுள்ளார் .

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5வது மற்றும்  கடைசி 20 ஓவர் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா 36 ரன்கள்  வித்தியாசத்தில் ,இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியா 5 தொடர் கொண்ட 20 ஓவர் போட்டிகளில்,3-2  என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இதில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக இந்திய அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ் குமாருக்கு ஆட்டநாயகன் விருதும், நடைபெற்ற 5 தொடரில் 3 அரைசதம் அடித்து 231 ரன்கள் எடுத்த ,கேப்டன் விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

இது பற்றி இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ருசல் அர்னால்டு ,தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள்  விளையாடியது  நல்ல தொடராக அமைந்தது என்றும், அதிகப் போட்டிகள் நிறைந்தாக  காணப்பட்டது என்றும்  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். இவ்வாறு இந்திய அணி பலத்த போட்டிக்கு பின் வெற்றி பெற்றது மிகப் பெரியது என தெரிவித்தார்.

Categories

Tech |