Categories
உலக செய்திகள்

மகன்களின் ஆதரவுடன் பாதுகாவலரை 5வது திருமணம் செய்த பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல நடிகையும், கோடீஸ்வரியுமான பமீலா ஆண்டர்சன் தனது  பாதுகாவலரை ஐந்தாவது திருமணம் செய்துள்ளார்.

கனடாவில் பிறந்த பமீலா பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது அவரது சொத்து மதிப்பு சுமார் $12 மில்லியன் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 52 வயதான பமீலா தனது பாதுகாவலரான ஹே ஹர்ஸ்ட் என்பவரை கரம் பிடித்துள்ளார்.  இவர்களது திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி கனடாவில் உள்ள வான்கூவர் தீவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் முன்னிலையில் நடைபெற்றது.

பமீலாவுக்கு  இது ஐந்தாவது திருமணமாகும். முதல் திருமணம் டாமி லீ என்ற இசைக்கலைஞருடன் நடைபெற்றது. டாமி லீ – பமீலா தம்பதியருக்கு ப்ராண்டன், டைலன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.  அப்போது பழகிய நான்கு நாட்களிலேயே பிரபல நடிகையான பமீலா டாம் லீயை திருமணம் செய்து கொண்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது திருமணம் செய்துள்ள ஹே ஹர்ஸ்ட் பமீலாவின்  சொந்த ஊரை சேர்ந்தவர். இந்த திருமணத்திற்கு பமீலாவின் இரண்டு மகன்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |