மத்திய பிரதேசம் காண்ட்வா மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிக்கூடத்தில் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் நாட்டு நடப்புகள் பிருவில் பாலிவுட் நட்சத்திர தம்பதி கரீனா கபூர் மற்றும் சைப் அலி கான் ஆகியோரின் முழு பெயர் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இந்தக் கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளி நிர்வாகத்துக்கு அந்த மாவட்டத்தின் பள்ளிக்கல்வித்துறை ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில் பள்ளியின் விளக்கத்தை பொருத்தே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.